நேபாள அரசியலமைப்பு சட்டக் கவுன்சில் குறித்த அவசர சட்டத் திருத்தம் ஒன்றை, சென்ற வாரம் அந்நாட்டு பிரதமர் கே.பி.சர்மா ஒலி வெளியிட்டார். இந்த அவசரச் சட்டத்துக்கு அந்நாட்டின் குடியரசுத் தலைவர் வித்தியா தேவியும் அங்கீகாரம் வழங்கியிருந்தார். ஆனால், அமைச்சரவை இச்சட்டத்தை அங்கீகரிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நேபாள அமைச்சரவையின் அவசரக் கூட்டம் இன்று (டிச.20) காலை நடைபெற்றது. இதில் நாடாளுமன்றத்தைக் கலைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து நேபாள குடியரசுத் தலைவர் வித்தியா தேவி பண்டாரி நாடாளுமன்றத்தைக் கலைக்க உத்தரவிடும்படி பிரதமர் கே.பி.சர்மா ஒலி பரிந்துரை வழங்கியுள்ளதாக செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதமர் பெரும்பான்மை ஆதரவை இழந்து விட்டார் என்றும், அதனால் சர்மா ஒலி பதவி விலக வேண்டும் எனவும் முன்னாள் பிரதமர் உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்துவரும் நிலையில், இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க...பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் புதிய குழுவினை அறிவித்த ஜோ பைடன்