ETV Bharat / international

கரோனாவால் பாதிக்கப்பட்ட 89 விழுக்காட்டினர் குணம் - சீனாவில் கரோனா பாதிப்பு

பெய்ஜிங்: கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 89 விழுக்காட்டினர் குணமடைந்துவிட்டதாக சீனா அறிவித்துள்ளது.

Covid-19 cases in China
Covid-19 cases in China
author img

By

Published : Mar 23, 2020, 2:28 PM IST

கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தொற்று, தற்போது பல்வேறு நாடுகளிலும் வேகமாக பரவிவருகிறது. இருப்பினும், சீனாவில் கடந்த சில நாள்களாகவே வைரஸ் தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்துவருகிறது.

இந்நிலையில் சீனாவில், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 89 விழுக்காட்டினர் குணமடைந்துவிட்டதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "கடந்த டிசம்பர் மாதம் முதல் 81,093 பேருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் 72,703 பேர் குணமடைந்துவிட்டனர். 5,120 பேர் மட்டுமே தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மார்ச் 22ஆம் தேதி நள்ளிரவு வரை 3,270 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது சிகிச்சை பெற்றுவருபவர்களில் 1,749 பேருக்கு மட்டுமே கடுமையான வைரஸ் தொற்று இருக்கிறது. மேலும், 136 பேர் வைரஸ் தொற்றின் அறிகுறிகளுடன் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் முதலில் பரவியதாக கருதப்படும் ஹூபே மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை யாருக்கும் புதிதாக வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை. அதே நேரத்தில் வூஹான் நகரில் 434 பேர் உட்பட மொத்தம் 447 பேர் ஹூபே மாகாணத்தில் சிகிச்சை முடிந்து நேற்று வீடு திரும்பினர்.

ஞாயிற்றுக்கிழமை சீனாவில் புதிதாக 39 பேருக்கு மட்டும் இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையும் படிங்க: கரோனா சந்தேகம் - தனிமையில் ஜெர்மனி அதிபர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.