ETV Bharat / international

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீண்டும் கவலைக்கிடம்! - Nawaz Sharif platelet count drops again

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Nawaz Sharif remains critical, platelet count drops again
author img

By

Published : Nov 3, 2019, 11:09 AM IST

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு ரத்த தட்டணுக்கள் குறைபாடு உள்ளது. இதனால் அவர் கடந்த மாதம் (அக்டோபர்) 22ஆம் தேதி, லாகூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிறப்பு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வாரம் அவரது உடல்நிலை மோசமடைந்தது. அவரது குடும்ப மருத்துவர்களும் இத்தகவலை தெரிவித்திருந்தனர்.

இதனால் நவாஸ் ஷெரீஃப் உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மருத்துவக் கண்காணிப்பில் இருக்கும் அவரது உடல்நிலை மீண்டும் மோசமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் மீண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, னாமா ஆவணங்கள் வெளியானதையடுத்து நவாஸ் ஷெரீஃப் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினார். இந்த வழக்கில் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் மருத்துவ சிகிச்சைக்காக பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இதையும் படிங்க: நவாஸ் ஷெரீப் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.