சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயர்ந்துவரும் உயிர்ப்பலியை நினைத்து பயத்தில் மக்கள் இருக்கும்போது, நாசா வெளியிட்ட புகைப்படம் ஒன்று பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும், ஐரோப்பிய விண்வெளி நிறுவனமும் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் சீனாவில் காற்று மாசு குறைந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த ஜனவரி மாதம் 1 முதல் 20 ஆம் தேதி வரை ஆய்வு செய்கையில் நைட்ரஜன் டை ஆக்சைடு அடர்த்தியாக பெரும் பரப்பளவில் காணப்பட்டது ஆனால், பிப்ரவரி 10ஆம் தேதி முதல் 25 வரை நடைபெற்ற ஆய்வில் நைட்ரஜன் டை ஆக்சைடு தடயங்கள் அரிதாகவே காணப்பட்டது.
இந்த நைட்ரஜன் டை ஆக்சைடு என்பது மோட்டார் வாகனங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், தொழிற்சாலைகளால் உமிழப்படும் மஞ்சள்-பழுப்பு வாயு ஆகும். இதனால் இருமல், ஆஸ்துமா, சுவாசிப்பதில் சிரமம் போன்ற சுவாசப் பிரச்னைகளை ஏற்படும்.
இதுகுறித்து நாசா ஆராய்ச்சியாளர் ஃபீ லியு (Fei Liu) கூறுகையில், "ஒரே மாதத்தில் பெரும் பரப்பளவில் இப்படி ஒரு திடீர் மாற்றத்தை நான் வாழ்க்கையில் முதன்முறையாக பார்க்கிறேன்" என்றார். கொரோனா வைரஸ்சால் சீனாக்கு கிடைத்த ஒரே நண்மை இது.
இதையும் படிங்க:பி.எம்.டபிள்யூ கார் மீது மோதிய அதிவேக ரயில் - பதறவைக்கும் சிசிடிவி காட்சி