ETV Bharat / international

எடைகுறைந்த கிம் ஜாங் உன் : உடல் நலக்குறைவா? டயட்டா? - Kim Jong Un look thinner

அண்மையில் பொதுவெளியில் உடல் மெலிந்த நிலையில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தோன்றியது பல்வேறு யூகங்களைக் கிளப்பிள்ளது.

N Korea's Kim looks much thinner, causing health speculation
எடைகுறைந்த கிம் ஜாங் உன் : உடல் நலக்குறைவா? டயட்டா?
author img

By

Published : Jun 16, 2021, 9:03 PM IST

சியோல்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஒரு மர்மம் நிறைந்த மனிதராகவே அறியப்படுகிறார். வடகொரியாவில் என்ன நடைபெறுகிறது என்பதே வெளியுலகத்திற்கு பெரும்பாலும் தெரிவதில்லை. அந்நாட்டு அரசு ஊடகத்தின் வாயிலாகவே அந்நாட்டின் நடக்கும் செய்திகளை பெரும்பாலானோர் அறிந்துகொள்ள முடிகிறது.

இந்தச்சூழ்நிலையில், அண்மையில், பொதுவெளியில் தோன்றிய ஜிம் ஜாங் உன், உடல்மெலிந்த நிலையில் இருந்ததே தென்கொரியா உள்ளிட்ட பல நாடுகளின் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றுள்ளது. வடகொரியாவில் நடக்கும் மாற்றங்கள் குறித்து உற்று நோக்கிவருபவர், 140 கிலோ எடை வரை இருந்த கிம், தற்போது 10 முதல் 20 கிலோ எடைவரை குறைந்துள்ளார் என்கின்றனர்.

உடல்நல பாதிப்பால் அவர் உடல்எடை குறைந்திருக்க வாய்ப்பில்லை என்றும், அவ்வாறு உடல் நல பாதிப்பு இருந்திருந்தால், தொழிலாளர் கட்சியின் கூட்டத்தில் அவர் தோன்றியிருக்க வாய்ப்பில்லை என்றும் தேசிய ஒருங்கிணைப்புக்கான கொரியா நிறுவனத்தின் ஆய்வாளர் ஹாங் மின் தெரிவித்துள்ளார். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காகவே அவர் உடல் எடையைக் குறைத்திருக்ககூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கிம்மின், தந்தை, தாத்தா ஆகிய இருவருமே இதயப் பிரச்னைகளால் உயிரிழந்தவர்கள் என்றும், கிம்முக்கும் இதயப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கடந்தாண்டு மருத்துவர்கள் கூறியதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: புலிட்சர் விருது பெறுகிறார் தமிழச்சி மேகா ராஜகோபாலன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.