ஏழு நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்க சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, 74வது ஐநா பொதுக்கூட்டத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
அந்த வகையில், நியூயார்க்கில் இன்று காலை நியூசிலாந்து பிரதமர் ஜசின்டா அர்டர்னை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின் போது, பயங்கரவாதம் உள்ளிட்ட உலக மற்றும் பிராந்திய பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், இருநாட்டிற்கு இடையேயான பொருளாதாரம், பாதுகாப்பு, அரசியலை மேம்படுத்துவது குறித்தும் அவர் ஆலோசித்தார்.
அத்துடன், இந்தியாவுடனான நியூசிலாந்தில் உறவை வலுப்படுத்துவது தொடர்பாக வகுத்துள்ள 'India 2020 - Investing in Relationship' குறித்து அந்நாட்டு பிரதமர் ஜசின்டா, மோடியிடம் தெரிவித்தார்.