இந்தோனேசியா மேற்கு ஜாவாவில் உள்ள தேசிய எரிசக்தி நிறுவனமான பெர்டாமினா பலோங்கன் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து வந்த மீட்பு படையினர் தீயை அணைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த 4 பேர் மீட்கப்பட்டு, இந்திராமயூ பகுதியிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தீ விபத்துக்கான காரணம் சரிவர தெரியவில்லை எனத் தெரிவித்த அலுவலர்கள், விபத்தின் போது பலத்த மழை பெய்ததாகக் கூறினர். மேலும், ஆலைக்கு அருகே வசிப்பவர்களின் பாதுகாப்பு கருதி இரண்டு மீட்பு மையங்கள் அமைக்கப்பட்டு, சுமார் 500 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.