ETV Bharat / international

பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் முனைப்பில் மலாய் கிங்!

கோலாலம்பூர்: மலேசியாவின் அடுத்த பிரதமரை தேர்தெடுக்க நாடாளுமன்றத்தில் கீழ்சபையில் உள்ள நபர்களை மலாய் மன்னர் நேர்காணல் செய்துவருகிறார்.

பிரதமரை தேர்ந்தெடுக்கும் முனைப்பில் மலாய் கிங்!

author img

By

Published : Feb 25, 2020, 5:45 PM IST

உலகின் மிகவும் வயதான பிரதமர் என்ற சிறப்பைப் பெற்ற மலேசிய பிரதமர் மகதீர் பின் முகம்மது (94) மீது கூட்டணி தர்மத்தை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, கடந்த 24ஆம் தேதி மகதீர் பின் முகம்மது, அந்நாட்டு மன்னரிடம் தன் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார்.

அதை மன்னரும் ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் மலேசியாவின் புதியப் பிரதமரை தேர்தெடுப்பதற்கான வேலையில் அந்நாட்டின் மன்னர் சுல்தான் அப்துல்லா அகம்மது ஷா இறங்கியுள்ளார்.

அதன் ஒரு பகுதியாக, தற்போது மலேசியா நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் உள்ள உறுப்பினர்களை ஒருவரையொருவர் நேர்காணல் செய்துவருகிறார். இது குறித்து அரண்மனைக்கான செலவு காப்பாளரான அகம்மது பதில் ஷாம்சுதீன் கூறுகையில், “மன்னர் நடத்தும் நேர்காணல் தலைமைச் செயலாளர் முன் நடைபெறுகிறது. இதில், ஒவ்வோரு அமைச்சர்களிடமும் 2-3 நிமிடங்கள் மட்டுமே நேர்காணல் நடக்கிறது. இது நாளைக்குள் முடியலாம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க...இந்தியாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்: முக்கிய நிகழ்வுகள் உடனுக்குடன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.