இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மூன்று மகன்களில் ஒருவரான ரோஹிதா ராஜபக்ச, சமூக ஊடகங்களில் தெரிவித்த கருத்துகளுக்கு மன்னிப்புக் கோரியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், “எந்தவொரு தனிநபருக்கும் அல்லது சமூகத்திற்கும் வேண்டுமென்றே துன்பத்தை ஏற்படுத்துவது எனது நோக்கம் அல்ல. எனவே, நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்" என ரோஹிதா கூறியுள்ளார்.
ரோஹிதா ராஜபக்ச ட்வீட்டுக்கு பதிலளித்த ஒருவர், “சில விமர்சனங்களைக் கூறி நீங்கள் பொதுப் பணத்தில் வாழ்ந்துவருகிறீர்கள்” எனக் கூறினார். இதற்குப் பதிலளித்த ரோஹிதா, “எனது தனியார் சொத்துகளை அறிவித்துக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.
எங்கள் நலன்களுக்காக எந்தப் பொது நிதியும் பயன்படுத்தப்படவில்லை. மற்றொருவரின் வெற்றியைப் பற்றி பொறாமைப்படாமல், நீங்கள் சொந்தமாக மனைவி, குழந்தையை உருவாக்குங்கள்” எனப் பொருள்படும்படி பதிலளித்தார்.
இது அவர் மீது பரவலான விமர்சனத்தைப் பெற்றுக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மயக்கும் பெண் குரல்... மயங்கிய ஆண்கள்... திணறிய காவல்துறை...!