மியான்மரில் கச்சின் மாநிலத்தில் ஹபகாந்த் பகுதியில் உள்ள பச்சை மாணிக்க கல் சுரங்கத்தில் நேற்று காலை எட்டு மணியளவில் கல் வெட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பருவமழை காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் தொழிலாளர்கள் அனைவரும் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து விரைந்த தீயணைப்புத் துறையினரும், மீட்பு படையினரும் தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சுமார் 12 மணி நேரம் நீடித்த இந்த மீட்புப் போராட்டத்தில் 162 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறதாகவும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
கச்சின் மாநிலத்தில் இதுபோன்று நிலச்சரிவு அடிக்கடி ஏற்படுவது வழக்கம்தான். ஆனால் இம்முறை நடந்த விபத்தில் அதிகமானோர் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.