சியோல்: வடகோரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் மனைவி, ரி சோல் ஜூ ஒரு வருடத்திற்குப் பின்பு பொதுவெளியில் தோன்றியுள்ளார். பெரும்பாலான நிகழ்ச்சிகளில் அதிபர் கிம்முடன் வலம் வரும் ரி, கடைசியாக, 2020ஆம் ஆண்டு புத்தாண்டு நிகழ்ச்சிக்குப் பின் பொதுவெளியில் தென்படவில்லை. இதைத்தொடர்ந்து அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும், கருவுற்றிருக்கிறார் என்றும் வதந்திகள் பரவின.
இந்தச் சூழ்நிலையில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேற்று ரி பொதுவெளியில் தோன்றியுள்ளார். இதுதொடர்பாக தென் கொரிய உளவு நிறுவனம், கரோனா வைரஸ் அபாயத்திலிருந்து தற்காத்துக் கொள்ளவே ரி சோல் ஜூ பொதுவெளியில் தோன்றுவதை தவிர்த்து வந்தார் என்றும், அவர் தனது குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு வந்தார் என்றும் தெரிவித்துள்ளது.
முன்னாள் அதிபர் கிம் ஜாங் இல்-லின் 79ஆவது பிறந்த தினத்தை நேற்று எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வடகொரியா அரசு கொண்டாடியுள்ளது. முன்னதாக, கிம் ஜாங் உன் தனது தந்தையின் கல்லறைக்கு சென்று மரியாதை செய்ததாகவும் அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: காங்கோ நதியில் படகு கவிழ்ந்து விபத்து: 60 பேர் உயிரிழப்பு