ETV Bharat / international

ஜப்பான் நாட்டிற்கு புதிய மன்னர்!

டோக்கியோ: ஜப்பான் நாட்டின் புதிய மன்னராக கோடாய்ஷி நருஹிதோ சினோ (Kotaishi Naruhito Shinno) முடி சூடிக் கொண்டார்.

Japan King
author img

By

Published : Oct 22, 2019, 11:26 PM IST

ஜப்பான் நாட்டின் மன்னராக இருந்தவர் அகிஹிதோ (Akihito). 85 வயதான இவர் உடல்நலக்குறைவு காரணமாக தன் மன்னர் பதவியை துறந்தார். இதனைத் தொடர்ந்து இவரின் இளைய மகனான கோடாய்ஷி நருஹிதோ சினோ புதிய மன்னராக முடி சூடி கொண்டார்.

ஜப்பானில் மன்னர்கள் இறக்கும் வரை அந்த பதவியில் இருப்பது வழக்கம். ஆனால், அகிஹிதோவின் வயது மூப்பை காரணம் காட்டி நாடாளுமன்றத்தில் சிறப்பு சட்டம் இயற்றப்பட்டது. இதன் பின்னரே, புதிய மன்னர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

முடி சூடி கொள்ளும் ஜப்பான் மன்னர்

அரண்மனையில் நடந்த விழாவில் பிரிட்டன் நாட்டின் இளவரசர் சார்லஸ், பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியூடர்டி, பிரேசில் அதிபர் போல்சனாரோ ஆகியோர் கலந்து கொண்டனர். அரச முறைப்படி பல சடங்குகள் நடத்தப்பட்டு முடிசூட்டும் விழா நடத்தப்பட்டது. 6.4 மீட்டர் நீளமுள்ள கிரிடத்தை விழாவில் மன்னர் சூட்டிக் கொண்டார்.

டோக்கியோவில் கனமழை பெய்தபோதிலும் தங்கள் நாட்டின் புதிய மன்னரை காண அரண்மனைக்கு வெளியே மக்கள் குவிந்திருந்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.