தஞ்சாவூர் : சூரியனார்கோயில் ஆதீனகர்த்தர் 28வது குருமகா சன்னிதானம் ஸ்ரீ மகாலிங்க தேசி பரமாச்சாரிய சுவாமிகள் (54) கடந்த அக் 10ம் தேதி கர்நாடக மாநிலம் சென்று ஹேமாஸ்ரீ என்ற 47 வயது பெண்ணை பதிவு திருமணம் செய்து கொண்டதாக அவரது திருமண பதிவு ஆவணம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இதுகுறித்து தன்னிலை விளக்கம் அளித்த ஆதீனம், 'திருமணம் செய்து கொண்டது உண்மைதான். இதனை மறைக்க விரும்பவில்லை. 10-க்கும் மேற்பட்டவர்கள் திருமணம் செய்து கொண்டு ஆதீனங்களாக செயலாற்றியுள்ளனர்' எனக் கூறியிகுந்தார்.
இந்நிலையில், இன்று( நவ 12) பொதுமக்கள் ஒரு தரப்பினர் மடத்தில் இருந்து ஸ்ரீ மகாலிங்க தேசி பரமாச்சாரிய சுவாமிகள் வெளியேற வற்புறுத்தினர். அதன்பேரில், அவர் மடத்தின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பாடால் காக்க, தாமாக மடத்தில் இருந்து வெளியேறி தற்சமயம் அருகில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தஞ்சமடைந்தார்.
இதையும் படிங்க : ”ஸ்ரீ கார்யம் என்ற தகுநிலையை இழந்துவிட்டீர்கள்” - ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க பண்டார சந்நிதி சட்டப்பூர்வ அறிவிப்பு!
இதற்கிடையில், ஆதீனத்தை வெளியேற்ற முயன்றவர்கள் மடத்தின் கேட்டை இழுத்து பூட்டியதால், அங்கு திடீர் பதற்றம் ஏற்பட்டது. இந்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து கும்பகோணம் டிஎஸ்பி கீர்த்திவாசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர். அதே வேளையில் சுவாமிகள் தொடர்ந்து மடத்தை விட்டு வெளியேற்றக் கூடாது என ஒரு தரப்பினர் எதிர்வாதம் செய்தனர். இதனால் தொடர்ச்சியாக அங்கு பரபரப்பு நிலவியது.
இதுதொடர்பாக ஸ்ரீ மகாலிங்க தேசி பரமாச்சாரிய சுவாமிகள் கூறுகையில், "தன்னால் மடத்தின் சொத்துக்களுக்கு எந்தவித பாதிப்பும் வந்து விடக்கூடாது என்பதற்காக, மடத்தை விட்டு வெளியேறி அருகில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தற்சமயம் தஞ்சமடைந்துள்ளேன். இந்த விவகாரத்தில், இந்து சமய அறநிலையத்துறை என்ன நடவடிக்கை எடுக்கிறதோ அதற்கு நான் கட்டுப்படுவேன்" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்