ETV Bharat / international

கரோனா தடுப்பூசிக்காக மசோதா நிறைவேற்றிய ஜப்பான் - கரோனா தடுப்பூசிக்காக மசோதா நிறைவேற்றிய ஜப்பான்'

கரோனா வைரஸிற்கான தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவது தொடர்பாகவும், அதன் செலவுகளை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் ஜப்பான் நாடாளுமன்றம் மசோதா ஒன்றினை நிறைவேற்றியுள்ளது.

Japanese parliament passes Bill to guarantee free COVID-19 vaccination for residents

author img

By

Published : Dec 2, 2020, 2:36 PM IST

டோக்கியோ: ஜப்பான் நாடாளுமன்றம் இன்று கரோனா வைரஸுக்கு எதிராக செயல்படும் தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவது தொடர்பாக ஒரு மசோதாவை ஒரு மனதுடன் நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதா தடுப்பூசிகளில் முன்னுரிமை, தடுப்பூசிகளுக்கான செலவுகள் ஆகியவற்றை நிர்வகிப்பதில் கவனம் செலுத்துகிறது.

இந்த மசோதா சட்டமாக்கப்பட்டபின் தடுப்பூசிக்கான அனைத்து செலவுகளை அரசு ஏற்றுக்கொள்வதற்கான சாதக மற்றும் பாதகமான விளைவுகள் குறித்தும் ஆய்வு செய்யப்படும். மருந்து நிறுவனங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகள் செய்யவும் வழிவகுக்கும்.

இதையடுத்து, தற்போது ஜப்பான் அரசு உருவாக்கப்படும் தடுப்பூசிகளை சேமிக்கும் முறை குறித்தும், தடுப்பூசி குறித்து உள்ளூர் அலுவலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகிறது. மேலும், ஜப்பான் அரசு வரும் ஆண்டின் முதல் பாதியில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்த தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதியவர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கவும் திட்டமிட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.