ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 12 முதல் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை அவசரநிலை ஊரடங்கு நடைமுறைக்கு வருகிறது. கோவிட் தொற்று தீவிரமடைவதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக பிரதமர் யோஷிதே சுகா தெரிவித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்
ஜூலை 23ஆம் தேதி டோக்கியோவில் ஒலிம்பிக் தொடர் தொடங்கவுள்ள நிலையில், அரசு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது முக்கியக் கவனத்தை பெற்றுள்ளது.
ஒலிம்பிக் தொடங்கும்பட்சத்தில் டெல்டா கரோனா பரவல் மேலும் அதிகரித்துவிடும் என அந்நாட்டு சுகாதாரத் துறை அலுவலர்கள் பிரதமருக்கு எச்சரிக்கைவிடுத்த நிலையில், முன்னெச்சரிக்கையாக இந்த ஊரடங்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனால் ஒலிம்பிக் போட்டிகள் பார்வையாளர்களின்றி நடைபெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், குறைந்த அளவிலான பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்க வாய்ப்புள்ளதா என்பது குறித்து ஜப்பான் அரசு, ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக் குழு, பன்னாட்டு ஒலிம்பிக் குழு ஆகியவை இணைதளம் வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளன.
இதையும் படிங்க: ஹைதி அதிபர் ஜொவினெல் மோஸ் படுகொலை