உலகின் பல்வேறு நாடுகளிலும் தற்போது கரோனா பரவல் குறைந்துவருகிறது. இருப்பினும், சில நாடுகளில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதைத் தடுக்க அந்த நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இந்நிலையில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ராணுவத்தில் இருக்கும் செவிலியரை அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்ப ஜப்பான் முடிவுசெய்துள்ளது. இது குறித்து ஜப்பான் அமைச்சரவைத் தலைமைச் செயலர் கட்சுனோபு கட்டோ கூறுகையில், "கரோனா பரவல் மோசமடைந்திருக்கும் இடங்களில் ராணுவ செவிலியரை அனுப்ப திட்டமிட்டுள்ளோம்.
ஒசாகா, ஹொக்கைடோ நிர்வாகங்கள் இதுபோன்ற கோரிக்கைகளை எழுப்புவது குறித்து ஆலோசித்துவருகின்றன. இது குறித்து அதிகாரப்பூர்வமாக கோரிக்கை எழுப்பப்பட்டவுடன் ராணுவ செவிலியரை அனுப்பத் தொடங்குவோம்" என்றார்.
திங்கள்கிழமை (டிச. 07) வரை ஜப்பானில் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 917 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டிருந்தது. அவர்களில் இரண்டாயிரத்து 259 பேர் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: சீனாவிடமிருந்து 12 லட்சம் கரோனா தடுப்பூசிகளை வாங்கிய இந்தோனேசியா!