டோக்கியோ: ஜப்பானிலும், அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அரச குடும்பம் அல்லாதவர்களை திருமணம் செய்யக்கூடாது என்ற தடையுள்ளது. இதனால், இளவரசி மகோவின் காதல் பல ஆண்டுகளாக திருமணத்தில் நடைபெறாமல் இருந்தது.
இதன்பின்னர், அரச குடும்பத்துக்கு சொத்துகள் ஏதும் வேண்டாம் எனக்கூறி, தனது காதலனை மணந்துகொண்டார். இதையடுத்து, தனது கணவருடன் அமெரிக்காவில் குடியேறிவிட்டார்.
உங்க சங்காத்தமே வேண்டாம்
அரசு குடும்பத்தினர், அரச குடும்பத்தினருக்கு வெளியே திருமணம் செய்துகொண்டால் இளவரசி பட்டம் பறிக்கப்படும். மேலும் அதற்கு இழப்பீடாக ஒரு மில்லியன் அமெரிக்கன் டாலர் வழங்கப்படும். இந்நிலையில், மக்கள் வரி பணத்தில் வரும் இழப்பீடு தொகை தனக்கு வேண்டாம் என இளவரசி மகோ தெரிவித்துள்ளார்.
தனது காதலுக்காக அரசு குடும்பத்து பட்டம், பணம் ஆகியவற்றை இளவரசி துறந்துள்ளது பலரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
இதையும் படிங்க: 'பனி மூடினாலும் பயணம்'- ஸ்ரீநகர்-லே ஜோசிலா சுரங்கப்பாதை.. அடுத்த 4 ஆண்டுகளில்!