ஜப்பானில் டோக்காய்டோ- ஷிங்கன்சென் ரயில் பாதையில் அதிகவேகமாக செல்லும் புதிய புல்லட் ரயில் ஒன்றை தயாரித்துள்ளனர். இந்த ரயில் N700S REIGNS Supreme என அழைக்கப்படுகிறது. முன்னதாக ஷிங்கன்சென் பாதையில் இயக்கப்பட்ட அதிவேக ரயில்களான N700, N700A ரயில்களின் அடுத்த மாடலாக N700S REIGNS Supreme அதீத வசதிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் மணிக்கு 285 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் தன்மை கொண்டதால், சிறப்பு வாய்ந்த பிரேக்கிங் சிஸ்டத்தை பொருத்தியுள்ளனர். இதன் மூலம், அதிவேக ரயிலை நொடியில் பாதுகாப்பாக நிறுத்திவிடலாம்.
இந்த ரயிலில் உலகின் முதல் லித்தியம் அயன் பேட்டரி செல்ஃப் புரோபல்ஷன் அமைப்பு உள்ளது. இந்த அமைப்பினால், இயற்கை பேரழிவின்போது மின் தடை ஏற்பட்டாலும் குறுகிய தூரத்திற்கு ரயிலை இயக்க முடிகிறது. அதேபோல், நிலநடுக்கம் நேரத்திலும் சுரங்கப்பாதை, பாலங்களை வழியாக பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பயணிகளுக்காக பல்வேறு அதிநவீன வசதிகளும் ரயிலில் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.