இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மஹிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றார். அவருக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் முன்னாள் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்துப் பேசினார்.
இதுகுறித்து மஹிந்த ராஜபக்ச, தனது ட்விட்டர் பக்கத்தில், இருநாடுகளுக்குமிடையே இருக்கும் உறவினை மேம்படுத்தும் விதமாக இந்த சந்திப்பு இருந்ததாக பதிவிட்டுள்ளார். இந்த சந்திப்பின்போது, மஹிந்த ராஜபக்சவுடன் அவரது மகன் நாமல் ராஜபக்சவும் உடனிருந்தார்.
-
External Affairs Minister of India, @DrSJaishankar paid a courtesy call to me last evening. Strengthening of the already existing bilateral relations between our two nations was discussed. pic.twitter.com/KW1hY17spG
— Mahinda Rajapaksa (@PresRajapaksa) November 20, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">External Affairs Minister of India, @DrSJaishankar paid a courtesy call to me last evening. Strengthening of the already existing bilateral relations between our two nations was discussed. pic.twitter.com/KW1hY17spG
— Mahinda Rajapaksa (@PresRajapaksa) November 20, 2019External Affairs Minister of India, @DrSJaishankar paid a courtesy call to me last evening. Strengthening of the already existing bilateral relations between our two nations was discussed. pic.twitter.com/KW1hY17spG
— Mahinda Rajapaksa (@PresRajapaksa) November 20, 2019
இதற்கிடையே, இன்று மாலை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் ரணில் விக்ரமசிங்கே பதவி விலகுவார் எனவும் அதன்பின் கோத்தபய ராஜபக்ச, தனது அமைச்சர்களுடன் பொறுப்பேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இலங்கை அதிபர் இம்மாத இறுதியில் இந்தியா வருகை!