ஜகார்த்தா: இந்தோனேஷியா நாட்டின் கிழக்கு ஜாவா பிராந்தியத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
மேலும், 7 நபர்களின் நிலை என்ன என்பது குறித்த தகவல் இல்லை என்றும், நிலச்சரிவில் காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், அந்நாட்டு பேரிடர் மேலாண்மை துறையின் செய்தித்தொடர்பாளர் ராடித்யா ஜா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிறு அன்று பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டதாக கருதும் அந்நாட்டு அரசு, 180க்கும் மேற்பட்ட கிராமங்கள் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக தங்கும் இடங்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறது.
இதையும் படிங்க: காங்கோ நதியில் படகு கவிழ்ந்து விபத்து: 60 பேர் உயிரிழப்பு