இந்தோனேசியாவில் நாள்தோறும் கரோனா பாதிப்போர் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதையடுத்து, சீனாவின் சினோவாக் பயோடெக் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட கரோனா தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியது.
இதற்காக கடந்தாண்டு கிட்டத்தட்ட 12 லட்சம் (1.2 மில்லியன்) கரோனா தடுப்பூசிகளை இந்தோனேசியா வாங்கியுள்ளது. முதற்கட்டமாக கரோனாவுக்கு எதிரான போரில் முன்நிற்கும் முன்கள பணியாளர்களுக்கு இம்மருந்து செலுத்தப்பட்டது. அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ, ஜனவரி 13ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டார். இந்நிலையில் இன்று அதிபர் மாளிகையில் (ஜன.27) இரண்டாவது தடுப்பூசியையும் அவர் எடுத்துள்ளார்.
தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னர் அவர், ’கடந்த இரண்டு வாரங்களைப் போலவே இப்போதும் எவ்வித வலியும் இல்லை’ எனத் தெரிவித்துள்ளார். கரோனாவுக்கு எதிராக போராடும் வகையில் அடுத்தாண்டுக்குள் 18.11 கோடி பேருக்கு (181.5 மில்லியன்) கரோனா தடுப்பூசி வழங்க அந்நாடு திட்டம் வகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கோவிட்-19 நிலவரம்: ஒரே நாளில் 12,689 பேருக்கு பாதிப்பு