பசிபிக் நாடான இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் அமைந்துள்ளது தலைநகர் ஜகார்தா. இந்நிலையில், ஜகார்தா மிகவும் கூட்டநெரிசலுடன் இருப்பதால், தலைநகரை வேறு இடத்துக்கு மாற்ற அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ முடிவெடுத்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு அமைச்சர் ஒருவர்,"தலைநகரை ஜாவா தீவிலிருந்து வேறிடத்திற்கு மாற்றுவது குறித்து அதிபர் முடிவெடுத்துள்ளார்" எனத் தெரிவித்தார்.
இந்தோனேஷியாவில் ஏப்ரல் 17ஆம் தேதி, ஒரே கட்டமாக பொதுத்தேர்தல் நடைபெற்றது. மே 22ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ள நிலையில், தேர்தலில்தான் வெற்றிபெற்றுவிட்டதாக அதிபர் ஜோகோ விடோடோ கூறிவருகிறார்.