ஜகார்த்தா : இந்தோனேசியாவின் தலைநகருக்கு அருகிலுள்ள நெரிசலான சிறைச்சாலையில் புதன்கிழமை (செப்.8) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 41 கைதிகள் உயிரிழந்தனர். 39 பேர் காயமடைந்தனர்.
போதைப்பொருள் குற்றவாளிகளுக்காக உருவாக்கப்பட்ட ஜகார்த்தாவின் புறநகர்ப் பகுதியில் உள்ள டாங்கெராங் சிறைச்சாலையின் பிளாக் சி யில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணத்தை அலுவலர்கள் ஆராய்ந்து வருவதாக சட்ட அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரிகா அப்ரியந்தி கூறினார்.
1,225 கைதிகள் தங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட டாங்கெராங் சிறையின் கட்டுப்பாட்டிற்கு நூற்றுக்கணக்கான காவல்துறையினரும் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் இருக்கலாம் எனவும் ரிகா கூறினார்.
தற்போது தீ ஏற்பட்ட சி பிளாக்கில் 122 குற்றவாளிகள் அடைக்கப்பட்டிருந்தனர். இங்கு பற்றியெரிந்த தீ சில மணி நேர போராட்டத்துக்கு பின்னர் கட்டுக்குள் வந்தது.
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தோனேசிய சிறைச்சாலைகளில் கலவரங்கள் மற்றும் தாக்குதல்கள் பொதுவானவை. தற்போது போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு சிறை கிடைக்காமல் அல்லல்படுவதும் ஒரு பொது பிரச்சினையாக மாறியுள்ளது.
இதையும் படிங்க : தாம்பரம் அருகே திடீர் தீ விபத்து