இந்தோனேசியா பப்புவா பகுதியில் பலத்தமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டதால் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 12 பேர் காணாமல் போனதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் ஜேயபுரா பகுதியில் 21 போ் சிக்கி ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
வெள்ளப்பெருக்கினால் 12க்கும் மேற்பட்ட வீடுகள், கட்டடங்கள், பாலங்கள், உள்கட்டடங்கள் இடிந்ததால் 3000 பேர் வீடுகள் இழந்துள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியா பகுதியில் மழைக்காலங்களில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட்டு வெள்ளம் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்நாட்டில் அடிக்கடி பூகம்பம் ஆழிப்பேரலை ஏற்படுகிறது.