தலைநகர் டெல்லி வந்துள்ள ஆஸ்திரேலியா முன்னாள் பிரதமர் டோனி அபோட் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்தார்.
அப்போது, "பிரதமர் மோடியின் தலைமையிலான அரசின் சீரிய நடவடிக்கையால் இந்தியா பல ஆண்டுகளுக்குப் பிறகு உலக அரங்கில் திறம்பட செயல்பட்டுவருகிறது. உலகப் பிரச்னைகளை ஆரவாரமின்றி இந்தியா அமைதியாக கையாள்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி நாகரிகமான, மனிதநேயமான முறையில் இந்தியாவின் குரலை உலக அரங்கில் பரவலாக ஒலிக்கச் செய்துள்ளார். ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராகும் அனைத்து தகுதிகளும் இந்தியாவுக்கு உண்டு என நான் தனிப்பட்ட முறையில் கருதுகிறேன். கவுன்சிலில் ஒன்றல்ல இரண்டு ஜனநாயக வல்லரசுகள் வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க : 'எர்டோகனின் தீவிர ரசிகன் நான்' - துருக்கி அதிபருக்கு ட்ரம்ப் புகழாரம்!