மத்திய உணவு பதப்படுத்தும் தொழில் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் படல், ஐக்கிய அரபு அமீரகத்தின் உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் மரியம் பின்த் முகமது சயீத் ஹரேப் அல் முஹைரியை கடந்த திங்கட்கிழமையன்று சந்தித்தார்.
இந்தியா, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு உணவு ஏற்றுமதி செய்யும் மிக முக்கிய நாடாக திகழ்ந்துவரும் நிலையில், உணவு பாதுகாப்புத் துறையில் தற்போது நிலவிவரும் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இரு அமைச்சர்களும் இச்சந்திப்பில் கலந்துரையாடினர். மேலும் உப்பு நீர் வேளாண்மை போன்ற துறைகளில் புதிய தகவல்களை இரு தரப்பினரும் பரிமாறிக்கொள்ளலாம் என்று விவாதிக்கப்பட்டது.
இதையடுத்து டெல்லியில் வரும் 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடக்கவிருக்கும் முதல் இயற்கை உணவு கண்காட்சியில் பங்கேற்க ஐக்கிய அரபு அமீரக அமைச்சர் அல் முஹைரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: கொலம்பியா மாகாண தலைமை நீதிபதியாக இந்தியர் நியமனம்