ETV Bharat / international

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் சட்டத்துறை அமைச்சர்கள் கூட்டம்! - ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு

டெல்லி: வரும் 16ஆம் தேதி நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் சட்டத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில், ரவி சங்கர் பிரசாத் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரவி சங்கர் பிரசாத்
ரவி சங்கர் பிரசாத்
author img

By

Published : Oct 13, 2020, 10:56 AM IST

ஆசிய நாடுகளுக்கிடையே அரசியல் ரீதியான உறவை மேம்படுத்தும் வகையிலும் அமைதியை நிலைநாட்டும் நோக்கிலும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு தொடங்கப்பட்டது. 2001ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் 2017ஆம் ஆண்டு இணைந்தது. இதற்கிடையே, ரஷ்யாவில் செப்டம்பர் 4ஆம் தேதி, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டம் தொடங்கியது.

இதில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். இந்திய, சீன நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவிவரும் நிலையில், அங்கு சென்ற ராஜ்நாத், சீன பிரதிநிதிகளை சந்தித்து பேசினார்.

இந்நிலையில், அக்டோபர் 16ஆம் தேதி, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் சட்டத்துறை அமைச்சர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை, இந்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தலைமை தாங்கி நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 13, 14 தேதிகளில் நடைபெறும் இரண்டாவது நிபுணர் செயற்குழு கூட்டத்தை சட்ட விவகாரத்துறை நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், சட்ட விவகாரத்துறை செயலாளர் அனூப் குமார் பங்கேற்கவுள்ளார். இவ்விரண்டு கூட்டங்களும் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெறவுள்ளது.

நாடுகளுக்கிடையே உள்ள சச்சரவுகளை தீர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது. தடயவியல் மற்றும் சட்ட விவகாரத் துறை நிபுணர் செயற்குழுவின் திட்டம் இந்த கூட்டத்தில் அமல்படுத்தப்படவுள்ளது. இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, கஜக்கஸ்தான், உஸ்பேகிஸ்தான் நாடுகளின் சட்டத்துறை அமைச்சர்கள், நிபுணர்கள் ஆகியோர் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.