மாலத்தீவுகளில் தட்டம்மை ஒழிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வாரத்தில் நான்கு பேருக்குத் தட்டம்மை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நோய் பரவும் அபாயம் இருந்ததால் அங்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்தது.
தட்டம்மை நோய் பரவும் அபாயத்தை முன்னிட்டு, மாலத்தீவு வைத்த வேண்டுகோளுக்கு இணங்க டெல்லியில் உள்ள தனியார் நிறுவனத்திடமிருந்து 30,000 எம்.ஆர் தடுப்பூசிகளைப் பெற்ற அம்மாநில அரசு, அதனை மூன்று நாள்களில் மாலத்தீவுகளுக்கு அனுப்பி வைத்தது.
தட்டம்மை கண்டுபிடிக்கப்பட்ட ஆரம்ப நிலையில் மாலத்தீவு அரசாங்கம் டென்மார்க்கையும், யுனிசெஃப்பையும் முதலில் அணுகியது. ஆனால், நான்கு வாரங்கள் ஆகும் என கூறப்பட்ட நிலையில், மூன்று நாள்களில் தடுப்பூசிகளை வழங்க டெல்லி மாநில அரசு ஒப்புக்கொண்டது.
இதையும் படிங்க: ‘அதிகாரத்தில் இருப்பவர்கள் ஜனநாயகத்தைத் துண்டாடுகிறார்கள்’ - சிதம்பரம்