இந்திய-சீன எல்லையான கிழக்கு லடாக்கில் அமைதியை மீட்டெடுப்பதற்காக இருநாட்டு ராணுவ உயர் அலுவலர்களுக்கிடையே நான்கு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இதன்மூலம் கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட சில சர்ச்சைக்குரிய பகுதிகளிலிருந்து இருநாட்டு ராணுவங்களும் தங்களது படைகளைத் திரும்பப் பெற்றுள்ளன.
இந்நிலையில், பாங்காங் சோ ஏரியிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுவதற்கான ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தை அடுத்த வாரத்தில் நடைபெறவுள்ளது. சென்ற வாரம் லடாக்கிற்குப் பயணம் மேற்கொண்டு ஆய்வில் ஈடுபட்ட பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ''நான்காம் கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள அனைத்துப் படைகளையும் திரும்பப் பெறுவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் எல்லை நிலைப்பாட்டிற்குத் தீர்வு காணும் பேச்சுவார்த்தையிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை மூலம் முழுமையான தீர்வு எட்டப்படும் என்று உத்தரவாதம் கொடுக்க முடியாது'' என்றார்.
இதையும் படிங்க: அமெரிக்கா - சீனா இடையே முற்றும் மோதல்!