தாய்லாந்தில் லோபூரி மாவட்டத்தில் படம் பிடிக்கப்பட்ட காட்சிகளில், சாப்பாட்டிற்காக விலங்குகள் ஒன்றுக்கொன்று தாக்குதல் நடத்தியது விலங்குகள் ஆர்வலர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
லோபூரியில் புறநகர்ப் பகுதியில் அதிகளவில் குரங்குகள் வசித்து வருகின்றன. சுற்றுலா தலமான லோபூரியில் அதிகளவில் வெளிநாட்டு மக்கள் வந்ததால், குரங்குகளுக்குத் தேவையான உணவுகள் எளிதாக கிடைத்து வந்தது.
இந்நிலையில், நாட்டை உலுக்கிய கொரோனா வைரஸ் அச்சத்தால் சுற்றுலாப் பயணிகளின் வருகை தாய்லாந்தில் வெகுவாக குறையத் தொடங்கியது. இதனால், சாப்பிட எதுவும் கிடைக்காத விரக்தியிலிருந்த குரங்குகள், சாலையில் திரிந்த காட்சிகள் பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.
அந்த வீடியோவில், சாலையில் கிடந்த ஒற்றை வாழைப்பழத்தை பார்த்த குரங்குகள் கூட்டம், திடீரென்று மொத்தமாக உணவைத் தேடி ஓடி வருகிறது. வாழைப்பழத்திற்காக ஒவ்வொரு குரங்கும் சண்டையிட்டுக் கொண்டது அப்பகுதி மக்களையே பயப்பட வைத்தது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,"அவை குரங்குகளை விட காட்டு நாய்களைப் போலவே நடந்து கொண்டது. ஒரு சிறிய உணவுக்காக குரங்குகளின் இத்தைகையே செயலை நான் பார்த்ததில்லை. குரங்குகள் மிகவும், மிகவும் பசியாக இருந்தது என நினைக்கிறேன். குரங்குகளுக்கு உணவளிக்க பொதுவாக இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இருக்கிறார்கள். ஆனால் இப்போது கொரோனா வைரஸ் காரணமாக அதிகமானவர்கள் இல்லாததே இக்குரங்குகளின் இச்செயலுக்குக் காரணம்" என்றனர்.
தற்போது , இந்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இதையும் படிங்க: 'அம்மா காப்பாத்துங்க' - குட்டியின் கதறல்: பதறிய தாயின் பாசப் போராட்டம்!