கடந்த 1949ஆம் ஆண்டு நடைபெற்ற போருக்கு பிறகு, தைவான், சீன நாடுகள் இரண்டாகப் பிரிந்தன. இருப்பினும், ஹாங்காங் போன்று சீனாவின் ஒரு அங்கமாக இருந்து இரட்டை அரசியலமைப்பை அமல்படுத்திக் கொள்ளும் படி, சீனா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த தைவான், சுதந்திர நாடாகவே இருப்போம் எனப் பிரகடனப்படுத்திக் கொண்டது. இதனால், இரு நாடுகளுக்கிடையே தொடர் பதற்றம் நிலவி வருகிறது. இதற்கிடையே, ஹாங்காங் நாட்டை சுதந்திர நாடாக அறிவிக்க தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், படகு மூலம் சட்டவிரோதமாக தைவான் நாட்டுக்குள் நுழைய முயற்சித்த ஹாங்காங் போராட்டக்காரர்களை சீனா காவல்துறை, கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்தனர். இவர்களை விடுவிக்க கோரி நியூயார்க், அடிலைட் உள்ளிட்ட பல நகரங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஹாங்காங் நாட்டின் முக்கிய சமூக செயற்பாட்டாளராகவுள்ளஜோஷ்வா வாங், 12 போராளிகளை விடுவிக்க கோரி சமூக வலைதளம் மூலம் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, தைவான் நாட்டின் தலைநகரமான தைபேயில் குவிந்த மக்கள் போராளிகளை விடுதலை செய்யும் நோக்கில் பேரணி நடத்தினர். இதில், தைவான் நாட்டில் உள்ள பல்வேறு அமைப்புகள், ஹாங்காங் நாட்டு மக்கள் கலந்துகொண்டனர்.