சீனாவில் தன்னாட்சி பிராந்தியமாக விளங்கும் ஹாங்காங்கில் போக்குவரத்து சேவைகளை ஸ்தம்பிக்கச் செய்யும் நோக்கில் இன்று போராட்டம் நடைபெற்றது.
இதனிடையே, ஹாங்காங்கின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சான் வான் ஹோ மாவட்டத்தில் நடந்த போராட்டத்தின்போது காவல் துறை அலுவலர் ஒருவர் இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ஃபேஸ்புக்கில் ஒளிபரப்பப்பட்ட நேரலையில், முகமூடி அணிந்துள்ள ஒரு போராட்டக்காரரை காவல் துறை அலுவலர் ஒருவர் துப்பாக்கி காட்டி மிரட்டுகிறார். இதற்கிடையில், இன்னொரு இளைஞர் காவலரின் துப்பாக்கியைப் பறிக்க முயலும்போது அவரை அந்தக் காவலர் துப்பாக்கியால் சுடுவது போன்று காட்சி அமைந்துள்ளது.
இந்தச் சம்பவத்தை காவல் துறையினர் உறுதி செய்துள்ளனர். துப்பாக்கியால் சுடப்பட்ட அந்த இளைஞர்களுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: ஈரானில் புதிய எண்ணெய் வயல் கண்டெடுப்பு!