ETV Bharat / international

லாக் டவுன் இல்லாமல் ஹாங்காங் கரோனாவை சமாளித்தது எப்படி ?

author img

By

Published : Apr 18, 2020, 8:05 PM IST

ஹாங்காங்கில் கரோனா பெருந்தொற்றின் முதல் அலையை ஹாங்காங் கட்டுக்குள் கொண்டுவந்ததாகத் தெரிகிறது. ஆனால் மற்ற நாடுகளைப் போன்று ஊரடங்கு கொண்டுவராமல் ஹாங்காங் கரோனாவை எப்படி சமாளித்ததென்பது குறித்து இச்சிறப்பு தொகுப்பில் பார்ப்போம்.

hk
hk

சீனாவில் தோன்றி உலகைச் சூறையாடி வரும் கரோனா பெருந்தொற்று காரணமாக உலகமே ஸ்தம்பித்துள்ளது. நோய்ப் பரவலைத் தடுக்க உலக நாடுகள் தேசிய அளவில் ஊரடங்கு பிறப்பித்துள்ளதால் உலகப் பொருளாதாரம் சீர்குலையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதேவேளையில், கரோனா பெருந்தொற்றின் முதல் அலையை, ஹாங்காங் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்காமலும், அதிகளவில் உயிர்ச்சேதமின்றியும் நிலைமையைச் சமாளித்துவிட்டதாக லாண்ஸெட் இதழில் வெளியான ஆய்வுக்கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லைகளுக்குச் சீல் வைத்தல், தனிமைப்படுத்துதல், நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகிய கூட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் ஹாங்காங் பெரும் ஆபத்தை தவிர்த்துவிட்டது என்கின்றனர் அந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர்கள்.

இந்த ஆய்வை மேற்கொண்ட பேராசிரியர் பென்ஜமின் கவுங்லிங் கூறுகையில், "சீனா, அமெரிக்கா, மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளைப் போன்று அழிவைக் கொண்டுவரக்கூடிய ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்காமல், தேவையான பொதுச் சுகாதார நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொண்டு ஹாங்காங் காரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.

ஹாங்காங்கின் வெற்றியிலிருந்து மற்ற நாடுகள் கற்றுக்கொள்ள வேண்டும். மக்களின் பங்களிப்போடு இந்த நடவடிக்கைகளை அவர்கள் தொடர்ந்து மேற்கொண்டால் பதற்றத்தையும், நோய் பாதிப்பையும் பெருமளவு தவிர்க்க முடியும்" என்றார்.

ஹாங்காங்கிற்கு கைகொடுத்த நடவடிக்கைகள்:

1. வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் மட்டுமின்றி, உள்ளூர் வாசிகளையும் ஹாங்காங் தீவிரமாகச் சோதனையிட்டது. மார்ச் மாத தொடக்கத்தில் ஒருநாளைக்கு 400 வெளி நோயாளிகளும், 600 உள்நோயாளிகளும் சோதனை செய்யப்பட்டனர்.

2. கரோனா பாதிப்புக்குள்ளானவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை தீவிரமாக வலைவீசித் தேடி கண்டுபிடித்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். கேளிக்கை விடுதிகள், புதிதாகக் கட்டப்பட்ட வீடுகள் தனிமைப்படுத்தலுக்காகப் பயன்படுத்தப்பட்டன.

3. சீனாவிலிருந்தோ, நோய் பாதிப்புக்குள்ளான நாடுகளிலிருந்தோ வந்தவர்கள் 14 நாள்களுக்கு வீடுகளிலோ, குவாரன்டைன் கட்டடங்களிலிலோ தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என உத்தரவிடப்பட்டது.

4. சமூக விலகலைக் கடைப்பிடிக்குமாறும், வீட்டிலிருந்தபடி வேலை செய்யுமாறும் மக்களை ஊக்குவித்த ஹாங்காங் அரசு, மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளை ரத்து செய்வது, பள்ளி, கல்லூரிகளை மூடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொண்டது.

பழக்கவழக்கங்களை மாற்றிக்கொண்ட மக்கள்

மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்வதை 85 சதவீதம் மக்கள் தவிர்த்துள்ளதாகவும், வெளியில் செல்லும்போது 99 சதவீத மக்கள் முகக் கவசம் அணிவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த மாற்றங்கள் நோய்ப் பரவலைத் தடுப்பதில் பெரும்பங்கு வகித்திருப்பதாக அந்த ஆய்வின் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவுக்கு மிக அருகில் இருந்தும் ஹாங்காங் கரோனாவைக் கட்டுப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது. ஹாங்காங்கில் கரோனா பெருந்தொற்றால் இதுவரை ஆயிரத்து 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க : விண்வெளி வீரர்கள் மூவர் பூமி திரும்பினர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.