Hong kong Protest Latest news
இங்கிலாந்தின் கட்டுப்பாட்டிலிருந்த ஹாங்காங் 1997ஆம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பு தகுதிபெற்ற பிராந்தியமாக ஹாங்காங் விளங்கிவருகிறது.
இந்நிலையில், ஹாங்காங் குற்றவாளிகளைச் சீனாவுக்கு நாடு கடத்தும் கைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெறுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி கடந்த ஜூன் மாதம் முதல் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இதனிடையே, போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கையான சர்ச்சைக்குரிய கைதிகள் பரிமாற்ற மசோதாவை முழுமையாகத் திரும்பப் பெறுகிறோம் என ஹாங்காங் நிர்வாகத் தலைவர் கேரி லாம் கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி அறிவித்தார். இதனால், ஹாங்காங்கில் போராட்டங்கள் படிப்யாகக் குறைந்து வந்தது.
இதையடுத்து, மீண்டும் போராட்டம் நடைபெறாது இருக்கவேண்டும் என்பதற்காக ஹாங்காங் அரசு சமீபத்தில் பொது வெளியில் முகமூடி அணிவதற்குத் தடைவிதித்தiதயடுத்து கடந்த சில நாட்களாக இளைஞர்கள் மீண்டும் தீவிர போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதையும் வாசிங்க : முகமூடி தடைக்கு எதிர்ப்பு: ஹாங்காங் இளைஞர்கள் தொடர் போராட்டம்
இதனிடையே, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திவரும் போராட்டக்காரர்கள், ஹாங்காங்கிலிருந்து-சீன நிலப்பகுதிக்குச் செல்லும் ரயில் சேவையைத் தடுக்கும் முயற்சியில் அங்குள்ள ரயில்நிலையங்களை சூறையாடினர்.
இதன் காரணமாக, 54 ரயில் நிலையங்கள் மூடப்பட்டு, சீனாவுக்குச் செல்லும் ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.