ஜப்பானில் உள்ள சில நிறுவனங்கள் வேலைக்கு வரும் பெண்கள் கட்டாயம் ஹை ஹீல்ஸ் அணிந்து கொண்டுதான் பணிக்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதற்கு பலர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இதற்கு சமூக வலைதள நிறுவனம்ஓன்று, வேலைக்கு செல்லும் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை எதிர்த்து பெண்களை திரட்டி போராடி வருகிறது.
யூமி இஷிகாவா என்ற விளம்பர மாடல் கடந்த ஜனவரியில், தினமும் ஹீல்ஸ் அணிவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து முதன்முறையாக ட்விட்டர் மூலமாக தெரிவித்தோடு, எதிர்ப்பையும் பதிவு செய்தார். இதற்கு 1 லட்சம் லைக்குகள், அதிக ரீ-ட்வீட்டுகள் கிடைத்தாக ஈஎஃப்ஈ செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.
அவர் பதிந்துள்ள ட்வீட்டில் எப்போதாவது சில நேரங்களில் ஹீல்ஸ் அணிவதையே வெறுக்கிறேன். "அப்படியிருக்கையில் நான் ஏன் வேலைக்கு செல்லும் அனைத்து நாட்களிலும் இதை அணிந்து கொண்டு போக வேண்டும். நான் காயப்பட வேண்டுமா? நான் ஏன் வேலை செய்ய வேண்டும்?" காயத்தோடு நான் ஏன் வேலை செய்யவேண்டும்?'' இவ்வாறு அவர் கேட்டுள்ளார்.
பின்னர் அவரே #KuToo என்ற பெயரில் ஹேஷ்டேக்கை உருவாக்கினார். இதற்கு குத்ஸ்சுவின் கலவை 'kutsu' (ஜப்பானிய ஷூ வகை), குத்சூ 'Kutsuu' (வலி) ஆகிய பொருட்களின் சுருக்கமாக இந்த ஹேஷ்டாக் அமைந்தது. மேலும் #MeToo இயக்கத்தின் மறுஉருவாக்கமாகவும் இது அமைந்துள்ளது.
இதற்கு ஏராளமான பெண்கள் பதிலளித்தனர். இந்த புகார் குறித்த தங்களது அனுபவங்களையும் அதில் பகிர்ந்துக் கொண்டனர். இவர்களில் சிலர் தங்கள் கால்களில் ஹீல்ஸ் அணிவதால் ஏற்படும் பாதிப்பு குறித்த படங்களைக்கூட பதிவேற்றம் செய்திருந்தனர்.இதை தொடர்ந்து கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் சில நிறுவனங்கள் தற்போது நிபந்தனைகளைத் தளர்த்தியுள்ளன.