ETV Bharat / international

மணிலா - வணிக வளாகத்தில் 30 பேர் சிறைப்பிடிப்பு

மணிலா : பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் துப்பாக்கியுடன் வணிக வளாகத்துக்குள் நுழைந்த ஒருவர், அங்கிருந்த 30 ஊழியர்களையும் சிறைபிடித்துள்ளார்.

manila mall
manila mall
author img

By

Published : Mar 2, 2020, 7:12 PM IST

Updated : Mar 3, 2020, 8:04 AM IST

பசிபிக் நாடான பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் வி-மால் என்ற பிரபல வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வணிக வளாகத்துக்குள் இன்று நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்தத் துப்பாக்கியை எடுத்து கண்மூடித்தனமாகச் சுட ஆரம்பித்தார்.

துப்பாக்கி சுடும் சத்தம் கேட்ட அதிர்ச்சியில் அங்கிருந்தவர்கள் சிதறி ஓட, அவ்வணிக வளாகத்தில் பணிபுரியும் சுமார் 30 ஊழியர்களையும் அந்த நபர் சிறைபிடித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் அந்த நபருடன் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.

மணிலாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து, சான் ஜூவான் நகர மேயர் பிரான்சிஸ் ஸாமோரா கூறுகையில், 'வணிக வளாகத்தில் அந்த நபர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்ததாகவும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்' என்றும் கூறினார்.

இதையும் படிங்க : சிரியாவில் அதிகரிக்கும் போர் பதற்றம்: மேலும் 19 வீரர்கள் உயிரிழப்பு

Last Updated : Mar 3, 2020, 8:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.