உலகளவில் பிரபலமான கூகுள் நிறுவனம், இந்தியாவில் கரோனா பாதிப்புக்குள்ளான மக்களுக்கு அறிவுரைகள் வழங்கவும், கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். அதன்படி, கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு சுகாதார ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்வதற்காக பெண் பயிற்சியாளர்களை நியமனம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "முதற்கட்டமாக இந்தோனேஷியாவில் கூகுள் மேப்ஸ் மூலம் கரோனா பரிசோதனை மையத்தை கண்டறிய உதவினோம். அதன்பிறகே தான் இந்தியா, கொரியா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கு கூகுள் நிறுவனம் இச்சேவையை விரிவுபடுத்தியது.
கொரியாவில், கூகுள் நியூஸ் அமைப்பு மூலம் தவறான தகவல்களை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்து வாரந்தோறும் பத்திரிகையாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. கரோனாவால் மில்லியன் கணக்கான மக்கள் நேரடியாக பாதிக்கப்படுவார்கள். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் எதிர்காலம் கரோனாவால் பெரிதும் பாதிக்கப்படும். அவற்றை சரிசெய்ய கூகுள் துணை நிற்கும்" என்றார்.
கரோனாவுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் மக்களைப் பாதுகாக்க கூகுள், தங்களால் முடிந்த புதிய முயற்சிகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிங்க: கரோனா காலத்திலும் கலைக்கு ஓய்வில்லை... 2 ஆயிரம் ஓவியங்கள் தீட்டிய நெல்லை மாணவர்கள்!