ETV Bharat / international

உலக அளவில் ஒரே நாளில் 2 லட்சத்து 94 ஆயிரம் பேருக்கு கரோனா!

author img

By

Published : Sep 4, 2020, 12:17 PM IST

உலக அளவில் நேற்று (செப்.03) ஒரே நாளில் இரண்டு லட்சத்து 94 ஆயிரத்து 115 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

cor
corna

உலக நாடுகளை மிரட்டும் கரோனா வைரசைக் கட்டுப்படுத்த முடியாமல் பல முன்னணி நாடுகளே திணறி வருகின்றன. வைரஸ் தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் தீவிரமாகக் களமிறங்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான மருந்துகள் பரிசோதனைக் கட்டத்தில் உள்ளன.

இதுவரை உலக அளவில் இரண்டு கோடியே 64 லட்சத்து 71 ஆயிரத்து 718 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை எட்டு லட்சத்து 73 ஆயிரத்து 223ஆக அதிகரித்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 86 லட்சத்து 64 ஆயிரத்து 286ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும் இரண்டு லட்சத்து 94 ஆயிரத்து 115 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கரோனாவால் அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.