உலக நாடுகளை மிரட்டும் கரோனா வைரசைக் (தீநுண்மி) கட்டுப்படுத்த முடியாமல் வளர்ந்த நாடுகளே திணறிவருகின்றன. கரோனா தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் தீவிரமாகக் களமிறங்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான மருந்துகள் பரிசோதனை கட்டத்தில் உள்ளன.

இதுவரை உலகளவில் இரண்டு கோடியே 28 லட்சத்து 60 ஆயிரத்து 184 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஏழு லட்சத்து 97 ஆயிரத்து 105 ஆக அதிகரித்துள்ளது. தீநுண்மியிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 55 லட்சத்து 15 ஆயிரத்து 681 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று (ஆக. 20) மட்டும் இரண்டு லட்சத்து 79 ஆயிரத்து 930 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆறாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கரோனா அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.