உலக நாடுகளை மிரட்டும் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமல் பல முன்னணி நாடுகளே திணறி வருகின்றன.
இதுவரை உலகளவில் 1 கோடியே 19 லட்சத்து 41 ஆயிரத்து 783 பேர், கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 45 ஆயிரத்து 652ஆக அதிகரித்துள்ளது.
வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 66 லட்சத்து 44 ஆயிரத்து 973ஆக உயர்ந்துள்ளது.
நேற்று(ஜூலை 7) ஒரே நாளில் மட்டும் 2 லட்சத்து 9 ஆயிரத்து 309 பேர், கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கரோனா அதிகம் பாதித்த நாடுகளில், இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.