சீனாவில், புதியதாக மூன்று பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது. தற்போது அந்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருவோரின் எண்ணிக்கை 402 ஆக உள்ளது.
கரோனா தொற்று பாதிப்பு காரணமாக இதுவரை உலகெங்கிலும் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை குணமானோர் எண்ணிக்கை 62 லட்சத்தை தாண்டியுள்ளது.
தென் கொரியாவில் கரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் தற்போது 63 பேருக்கு புதியதாக தொற்று பாதித்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ஶது.
இதுவரை 13,030 பேருக்கு தொற்று பாதித்துள்ளதாகவும், 283 பேர் இறந்துள்ளதாகவும் கொரியா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் தற்போது 137 பேர் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால் தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 44 ஆயிரத்து 131 ஆக உயர்ந்துள்ளதாக பிரிட்டிஷ் சுகாதார மற்றும் சமூக பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
நேற்று காலை வரை இரண்டு லட்சத்து 84 ஆயிரத்து 276 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது என்றும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 544 ஆக உள்ளது என்றும் பிரிட்டிஷ் சுகாதார மற்றும் சமூக பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.
இதையும் படிங்க... தொற்று பாதிக்கப்பட்ட நகரில் 30 லட்சம் பரிசோதனைகளை மேற்கொண்ட சீனா