பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்ட கரோனாவின் கோரமுகம் இன்னும் முடிந்தப்பாடு இல்லை. தினந்தோறும் தனது எல்லையை கடந்து புதிய பகுதிகளுக்கு சென்று கொண்டுதான் இருக்கிறது. இதைச் சமாளிக்க முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர்.
இதுவரை, உலகளவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16 லட்சத்தைத் தாண்டியுள்ளது. கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 95 ஆயிரமாக உயர்ந்துள்ளது. மூன்றரை லட்சம் மக்கள் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
குறிப்பாக நியூயார்க், இத்தாலி , அமெரிக்கா பகுதிகளில் கரோனா கால் பதித்து மூன்று வாரங்கள் ஆகியும் அதன் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இத்தாலி, ஸ்பெயின் ஆகிய இரண்டு நாடுகளில் மட்டுமே 33 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனாவால் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 16 ஆயிரமாக அதிகரிப்பு