கரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை ஒவ்வொன்றாக பதம் பார்த்துவருகிறது. இதைக் கட்டுப்படுத்தத் தனிமைப்படுத்தல், கிருமி நாசினி தெளிப்பு, ஊரடங்கு உத்தரவு என அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்குப் பஞ்சம் இல்லை.
இருப்பினும் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் உலகளவில் பல்வேறு நாடுகள் திணறிவருகின்றன. இதுவரை, உலகளவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15,21,068ஆக அதிகரித்துள்ளது.
கரோனா வைரஸ் நோயால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 88 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அமெரிக்காவில் மட்டும் 4,35,160 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக ஸ்பெயினில் 1,48,220 பேரும் இத்தாலியில் 1,39,422 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.