'பனாமா பேப்பர்ஸ்' ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃபுக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, லாகூர் சிறையில் அடைக்கப்பட்ட அவர், உடல் நலக்குறைபாடு காரணமாக கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், கடந்த வாரம் அவருக்கு உடல்நிலை மோசமடைந்ததையடுத்து சிகிச்சையளித்துவந்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக நவாஸை வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தினர்.
இதனையடுத்து, வெளிநாடு செல்ல பாகிஸ்தான் அரசிடம் பரோலில் மனு அளித்திருந்தார். அந்த மனுவை ஏற்றுக்கொண்ட பாகிஸ்தான் அரசு நவாஸ் ஷெரிஃபுக்கு கடுமையான நிபந்தனைகளை விதித்தது.
இதனை எதிர்த்து லாகூர் நீதிமன்றத்தில் நவாஸ் ஷெரிஃப் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், கட்டுப்பாடுகள் அனைத்தையும் தளர்த்தி வெளிநாடு செல்ல அனுமதி வழங்கியது.
இந்நிலையில், லாகூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து 'கத்தார் ஏர் ஆம்புலன்ஸ்' விமானம் மூலம் இன்று பத்து மணி அளவில் நவாஸ் ஷெரிஃப் லண்டனுக்குப் புறப்பட்டார்.
இதையும் படிங்க : பயங்கரவாதிகளின் முகாம்களை துல்லியமாக கண்டறியும் பிஎஸ்எல்வி சி-47 வரும் 25ஆம் தேதி ஏவப்படும்!