அட்லாண்டிக் கடலில் மீன்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக சில குழுக்கள் இயங்கி வருகின்றனர். அவர்கள் ஆழ்கடலில் மீன்களைப் பிடித்து ஆய்வு செய்துவிட்டு திரும்பவும் கடலில் விட்டு விடுவது வழக்கம்.
இந்நிலையில் அயர்லாந்தைச் சேர்ந்த டேவ் எட்வார்ட்ஸ் என்னும் நபரின் தூண்டிலில் 8.5 அடி நீளம் உள்ள 270 கிலோ எடை கொண்ட ராட்சத சுறா மீன் ஒன்று சிக்கியுள்ளது. அந்த மீன் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ. 23 கோடி வரை விலை போகும் என கூறப்படுகிறது.
ஆனால் வணிக ரீதியாகக் குழுக்கள் கடலுக்குள் வராத காரணத்தினால் சுறா மீனை மீண்டும் கடலில் விட்டுள்ளனர். அவ்வாறு மீன்களைப் பிடித்து மீண்டும் கடலில் விடும் பணியை 15 படகுகள் கொண்ட குழு அட்லாண்டிக் கடலில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.