சீனாவைச் சேர்ந்த விண்வெளி வீராங்கணை வாங் யாப்பிங், மற்றொரு விண்வெளி வீரர் ஷாய் ஷிகாங் என்பவருடன் சர்வதேச விண்வெளி மையத்தில் நடந்து ஆய்வு செய்தார். இதன் மூலம் விண்வெளியில் நடந்த (Space Walk) முதல் சீனப் பெண்மணி என்ற பெருமையை வாங் யாப்பிங் பெற்றுள்ளார்.
இருவரும் சுமார் ஆறு மணிநேரம் நடந்துள்ளதாகவும், விண்வெளி வீரர்கள் குழுவுக்கும் விண்வெளி மையத்திற்கு சிறப்பான தகவல் தொடர்பு இருப்பதாக சீன விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் 16ஆம் தேதி சீனா ஷென்ஷோ-13 என்ற விண்கலத்தை கட்டப்பட்டுவரும் விண்வெளி மையத்தை செலுத்தியது. இந்த குழுவில் வீராங்கனை வாங் யாப்பிங் இடம்பெற்றார். விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது சீனப்பெண் இவராவார்.
இந்த விண்வெளி மையத்தின் கட்டுமானப்பணி அடுத்தாண்டுக்குள் நிறைவுபெறும் என சீனா தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கிருஷ்ணம்மாள் ஜகன்நாதன் உள்ளிட்ட 119 பேருக்கு பத்ம விருது வழங்கப்பட்டது