ETV Bharat / international

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவம்: சிறிசேனவிடம் 6 மணி நேரம் விசாரணை

கொழும்பு: உளவுத் துறை அறிக்கை குறித்து தனக்கு விளக்கமளிக்கத் தவறியதுதான், 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறன்று நடைபெற்ற தொடர் வெடிகுண்டு தாக்குதல்களுக்கு வழிவகுத்ததாக இலங்கை முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Oct 7, 2020, 3:14 PM IST

sirisena
sirisena

இலங்கையில் ஏப்ரல் 21, 2019 அன்று, நெகம்போ, மட்டக்களப்பு, கொழும்பு ஆகிய இடங்களில் உள்ள மூன்று தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றது. ஆனால் இதுவரை இந்தத் தாக்குதலில் அந்தக் குழு ஈடுபட்டதற்கான நேரடி ஆதாரங்கள் எதையும் வெளியிடவில்லை.

இந்தத் தொடர் வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் குறித்து விசாரிக்கும் அதிபர் விசாரணை ஆணையம் முன், ஆஜரான இலங்கையின் முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனவுடன் சுமார் ஆறு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதுதொடர்பான செய்திகளை அவர் தற்போது வெளியிட்டுள்ளார்.

அதில், "இந்தத் தாக்குதல் தொடர்பான உளவுத் துறை அறிக்கைகள் குறித்து எனக்கு விளக்கமளிக்கப்பட்டிருந்தால், நான் எனது வெளிநாட்டுப் பயணத்தை நிறுத்திவிட்டு, இத்தகைய கொடூரமான தாக்குதல்கள் நடைபெறாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திருப்பேன்.

உளவுத்துறை அறிக்கைகளைப் பின்தொடர்வதற்கான பொறுப்பை ஒப்படைத்தவர்கள் தங்கள் பணியை விடாமுயற்சியுடன் செய்திருந்தால் இந்தப் பேரழிவைத் தவிர்க்க முடியும்.

2019 ஏப்ரல் 16ஆம் தேதி, சிங்கப்பூருக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டபோது துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடந்தன. பயணம் மேற்கொள்வதற்கு முன்னதாக, அப்போதைய ஐ.ஜி.பி. புஜித் ஜெயசுந்தேரா, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ, மாநில புலனாய்வு அமைப்பின் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டேன்.

அந்தக் கூட்டத்தில்கூட பயங்கரவாத தாக்குதலுக்கான அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரிக்கப்பட்ட உளவுத் துறையின் அறிக்கை குறித்து தன்னிடம் எதுவும் கூறப்படவில்லை. உளவுத் துறை அறிக்கையை நான் அறிந்திருந்தால், இதுபோன்ற அச்சுறுத்தலைக் கையாளுவதில் கவனம் செலுத்தியிருப்பேன்.

இந்தச் சம்பவங்கள் எனது அரசியல் வாழ்க்கையில் மிக மோசமான கறுப்பு அடையாளமாகும், தனிப்பட்ட முறையில் அது என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது" என்றார்.

சிறிசேன தனது தரப்பு சாட்சியங்களை அக்டோபர் 12ஆம் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செவ்வாய்க்கிழமை ஆஜரானார்.

இதையும் படிங்க: இந்திய - அமெரிக்க உறவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் - அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் உறுதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.