ETV Bharat / international

அல்நூர் மசூதி துப்பாக்கிச் சூடு! வெளியான புது தகவல் - faulty

வெலிங்டன்: நியூசிலாந்து மசூதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின்போது அவசர வழிக் கதவு திறக்கப்படவில்லை என துப்பாக்கிச் சூட்டில் தப்பித்த நபர் தெரிவித்துள்ளார்.

அல்நூர் மசூதி
author img

By

Published : Mar 28, 2019, 3:56 PM IST

நியூசிலாந்தின் கிறிஸ்ட் சர்ச் நகரில் மார்ச் 15ஆம் தேதி இரண்டு மசூதிகளில் சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அல்நூர் மசூதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 42 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக காவல் துறை, உளவுத் துறை உள்ளிட்ட சில முக்கிய துறைகளிடம் விசாரணை நடத்த அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா,ஆணையம் அமைத்துள்ளார்.

இந்நிலையில், அல்நூர் மசூதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் தப்பித்த கலித் அல்னோபானி என்பவர் தாக்குதலின்போது நடந்த நிகழ்வுகள் குறித்து ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "மசூதியின் மற்றொரு கதவை திறக்க 17-க்கும் மேற்பட்டோர் முயற்சித்தனர்.

இந்தக் கதவுதான் சம்பவத்தின்போது தப்பிக்க ஒரே ஒரு வழியாக இருந்தது. ஆனால் எவ்வளவு முயற்சித்தும் கதவு திறக்கப்படவில்லை. கதவு திறக்கப்படததால் ஜன்னலை உடைத்துதப்பிக்கும் முயற்சியிலும் சிலர் ஈடுபட்டனர்" என்றார்.

வெலிங்டன், நியூசிலாந்து, அல் நூர் மசூதி,
அல்நூர் மசூதி

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவரும் காவல் துறையினர்,இதுவரை எவ்வித தகவலும் வெளியிடவில்லை.

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/international/asia-pacific/emergency-exit-door-of-one-of-the-christchurch-mosques-faulty-survivors/na20190328122844558

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.