கடந்தாண்டு ஏப்ரல் 21ஆம் தேதி இலங்கையின் மூன்று தேவாலயங்கள், பல்வேறு நட்சத்திர விடுதிகளில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 258 பேர் உயிரிழந்தனர்.
இஸ்லாமிய நாடுகள் இந்தக் குண்டுவெடிப்பிற்கு பொறுப்பேற்றபோதும், அந்நாட்டு அரசு தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பையே குற்றஞ்சாட்டி வந்தது. தற்போதுவரை இது தொடர்பாக 300 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தக் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து நாடு முழுவதும் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தொடங்கி, ஆகஸ்ட் வரை அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.
தற்போது இந்தக் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுசெய்யப்பட்ட 61 பேரின் காவலை வருகிற பிப்ரவரி 12ஆம் தேதிவரை நீட்டித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை குண்டுவெடிப்பில் கைதுசெய்யப்பட்ட 61 பேரும் தேசிய தவ்ஹீத் ஜமாத் எனப்படும் அந்நாட்டின் உள்ளூர் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என அந்நாட்டு காவல் துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இந்த குண்டுவெடிப்பு குறித்த அறிக்கையை காவல் துறை பதிவுசெய்திருந்தது. மேலும் விக்ரமசிங்க, அந்நாட்டு குடியரசுத் தலைவர் மைத்ரிபால சிறிசேன இருவரின் தலைமையிலான அரசுதான் இந்த மோசமான குண்டுவெடிப்பிற்கு பொறுப்பேற்க வேண்டுமெனவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தையும் படிங்க: இலங்கை எந்நாட்டுக்கும் அடிபணியாது - அதிபர் கோத்தபய