இந்திய குடியரசு தின விழாவையொட்டி உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபா தனது கட்டிடத்தின் முகப்பில் இந்திய மூவர்ண கொடி நிறங்களையுடைய விளக்குகளை ஒளிபரப்பியது.
நேற்று இரவு சுமார் 8 மணியளவில் புர்ஜ் கலிஃபா மூவர்ண நிறங்களால் மிளிரியது. முன்னதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமை, இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான், பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் ஆகியோர் தங்களது வாழ்த்து செய்திகளை ராம்நாத் கோவிந்துக்கு தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தியாகிகளின் குழந்தைகள் தேர்வு மையங்களை மாற்றலாம் - சிபிஎஸ்இ அறிவிப்பு